இந்த நிலையில் அதிமுக உடன் கூட்டணியிலிருந்த பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் அதிமுகவுடன் இணைய வாய்ப்பில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
எனவே அதிமுக கூட்டணி கட்சிகள் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேற வாய்ப்பு இல்லை என்றும் திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருந்தாலும் திமுகவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகள் பேசிக் கொண்டிருப்பதால் அந்த கூட்டணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்