திமுக அரசின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது - எடப்பாடி பழனிசாமி

செவ்வாய், 26 டிசம்பர் 2023 (14:18 IST)
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துவிட்டது. போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு தவறிவிட்டது. திமுக அரசின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி தலைமையில் அதிமுக பொதுக்குழு இன்று நடந்து வரும் நிலையில், இன்றைய பொதுக்குழுவின் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ’’ தமிழ்நாடு அரசியலில் வரலாற்றில் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது அதிமுக. கொரொனா தொற்று காலத்திலும் சிறப்பாக செயல்பட்டது அதிமுக. 520 தேர்தல் வாக்குறுதிகளையும், திமுக  நிறைவேற்றவில்லை. நீதிமன்ற அறிவுறுத்தலுக்குப் பின்னும் அமைச்சரவை பதவி நீக்கம் செய்யாதது சரியில்லை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துவிட்டது. போதைப்பொருள் விற்பனையை தடுக்க அரசு தவறிவிட்டது. திமுக அரசின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தமிழகத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக அதிமுக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்