அதிமுக தான் சிறுபான்மையினரை அரண் போல காக்கும் கட்சி, மருத்துவ கல்லூரி என பல்வேறு கல்லூரிகளை திறந்தது அதிமுக ஆட்சியில் தான், உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க அதிமுக ஆட்சி தான் காரணம் ” என எடப்பாடி பழனிசாமி பேசினார்,.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர் உடனடியாக சென்றிருந்தால் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டிருப்பர, நிதியில்லை எனக்கூறி வரும் திமுக அரசு அதனை பெருக்குவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவில்லை;
தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு எந்த காலத்திலும் வழங்கியதாக சரித்திரம் இல்லை, மக்கள் நலன் கருதி தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்” என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்,