தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை: எடப்பாடி பழனிச்சாமி

செவ்வாய், 26 டிசம்பர் 2023 (17:02 IST)
தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஆவேசமாக பேசினார். அவர் மேலும் பேசியதாவது:
 
தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை, மக்கள்தான் நம்முடைய எஜமானர்கள், காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது 
 
மாநில அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுத்தது இல்லை, யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக மக்களுக்கு நன்மை செய்ததில்லை. மக்கள் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே என் எண்ணம் இனி பாஜக உடன் எப்போதும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி  பழனிச்சாமி பேசினார்.
 
 ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறும்  எடப்பாடி பழனிச்சாமி யாரை பிரதமர் வேட்பாளராக ஆதரித்து பிரச்சாரம் செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்தியா கூட்டணியிலும் சேராமல் பாஜக கூட்டணியும் சேராமல்  அதிமுக எந்த வகையிலான பிரச்சாரத்தில் ஈடுபட போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்