நடிகர் விஜய்யின் தந்தை மீது பண மோசடி புகார் ! பரபரப்பு தகவல்

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (16:00 IST)
தமிழகத்தில் எங்கே அராஜகம் நடந்தாலும்  அங்கே ஆஜராகி நியாயம் பெற வேண்டி போரடிவருபவர் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. இவரது சமூக செயல்களை அடிப்படையாக வைத்து டிராபிக் ராமசாமி என்ற படத்தை நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி நடித்திருந்தார். 
இப்படத்திற்காக,  ரூ.21 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
டிராபிக் ராமசாமி என்ற படத்தின் தமிழ்நாட்டு ஒளிபரப்பு உரிமத்தை ரூ. 3 கோடிக்கு அளிப்பதாக உறுதி அளித்து, தமிழகத்தைச் சேர்ந்தவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவருமான சுப்பிரமணியன் என்பவரிடம் ரூ. 21 லட்சத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டு எஸ்.ஏ.சி ஒரு ஒப்பந்தம் போட்டதாகத் தெரிகிறது.
 
இதனைத்தொடர்ந்து, 'டிராபிக் ராமசாமி' படத்தை எஸ்.ஏ.சி சில நாட்கள் கழித்து வெளியிட போவதால், சுப்பிரமணியனிடம் பெற்ற பணத்தை திரும்பித் தருவதாக கூறிய பிறகும் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். பின்னர் தான் கொடுத்த பணத்தை சுப்பிரமணியம் எஸ்.ஏ.சியிடம் கேட்டுள்ளார். இதற்கு இரு தரப்பிலும் வாக்குவாதம் ஆனதாக  தெரிகிறது.
 
இந்நிலையில்,அப்பணத்தை தர தாமதிப்பதாகவும், கேட்டால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் எஸ்.ஏ. சந்திரசேகர் மீது சுப்பிரமணியன் சார்பாக தயாரிப்பாளர் மணிமாறன் புகார் அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்