சூப்பர் ஸ்டார் படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனை - பார்த்திபன் டுவீட்

திங்கள், 30 செப்டம்பர் 2019 (14:05 IST)
’’நெஞ்சுக்கு நெருங்கிய ஆத்மார்த்தமான நண்பர், இனிப்பின் ஆண் உருவம் சிரஞ்சீவி ’’என தெலுங்கு சினிமாவின் சூப்பர்  ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவியைப் பாராட்டி நடிகர் மற்றும் இயக்குநர் ரா. பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் மற்றும் இயக்குநரான பார்த்திபன் இயக்கி நடித்து வெளியாக்கியுள்ள ' ஒத்த செருப்பு' படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.  ஆனால் குறைந்த தியேட்டர்களில்தான் அப்படம் வெளியானது. அதுவும் பெரிய படங்கள் வெளியானதும் 'ஒத்த செருப்பு' படம் தூக்கப்படும் அபாயம் இருந்தது.
 
இதற்கிடையே, இந்திய திரைப்படங்களில் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தேடுக்கத் தேர்வாகும் பிரிவில் கலந்து கொண்ட 'ஒத்த செருப்பு' கடைசி நேரத்தில் ஏமாற்றம் தந்தது. இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் பட நாமினேசனுக்கு கலிபாய் என்ற இந்திப் படம் தேர்வாகியுள்ளது.
இந்நிலையில், இன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
 
நெஞ்சுக்கு நெருங்ங்ங்கிய
 
ஆத்மார்த்த நண்பர்,இனிப்பின் ஆண் உருவம் The great mega star சிரஞ்சீவி அவர்களின் SAIRA' பெரும் வெற்றி பெறும்( நமக்கு தியேட்டர் கிடைக்கிறதுல பிரச்சனை தான்) வாழ்த்துக்கள்.. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
ராம் சரண் தயாரிப்பில், சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப்பச்சன் விஜய் சேதுபதி,சுதீப் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள சைர நரசிம்ம ரெட்டி இப்படம் அக்டோபர் - 2 ஆம் தேதி  உலகம் முழுவதும் ரிலீசாகிறது.
இதையொட்டி சைர நரசிம்ம ரெட்டி படத்தை விளம்பரப்படுத்தும் புரொமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிபில் வெளியாகவுள்ள ’சைர நரசிம்ம ரெட்டி’ படத்திற்கு’ தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனை இருக்கும் என்றே ’ பதிவிட்டுள்ளார். அதவாது தனது ஒத்த செருப்பு படத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமைதான் ’சைர நரசிம்ம ரெட்டி படத்திற்கு ஏற்படும் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் பார்த்திபன்.
 
அதேசமயம் ’ஆத்மார்த்த நண்பர்,இனிப்பின் ஆண் உருவம் The great mega star சிரஞ்சீவி அவர்களின் SAIRA' பெரும் வெற்றி பெறும்’ என தன் வாழ்த்துகளையும்  பாத்திபன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

நெஞ்சுக்கு நெருங்ங்ங்கிய
ஆத்மார்த்த நண்பர்,இனிப்பின் ஆண் உருவம் The great mega star சிரஞ்சீவி அவர்களின் SAIRA'
பெரும் வெற்றி பெறும்( நமக்கு தியேட்டர் கிடைக்கிறதுல பிரச்சனை தான்) வாழ்த்துக்கள் https://t.co/BsMzIJsLLv

— R.Parthiban (@rparthiepan) September 30, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்