நடிகர் திலகம் சிவாஜியை மறந்த நடிகர் சங்கம் : ரசிகர்கள் வருத்தம் !

செவ்வாய், 1 அக்டோபர் 2019 (21:09 IST)
உலக அளவில் மிகச் சிறந்த நடிகர் என்று புகழப்படுகின்றவர் நடிகர் சிவாஜி. சிம்மக்குரலோன், நடிப்பு திலகம் என்று பல்வேறு சிறப்புப் பெயர்களில் அழைக்கப்படும் இவர் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமான பராசக்தி படத்தில் தனது திரைபிரவேசத்தை தொடங்கி பல வெற்றிப் படங்களில் நடித்து பல முன்னணி நடிகர்களுக்கு முன்மாதிரியாக இருப்பவர் சிவாஜி. அவரது பிறந்தநாள் இன்று.
இந்நிலையில் சிவாஜியின் 92 வது பிறந்தநாளை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சிவாஜி சமூக நலப்பேரவை ஒரு அறிக்கை விடுத்துள்ளது. அதில்,தென்னிந்திய நடிகர் சங்கம் சிவாஜியின் பிறந்தநாளை கொண்டாட நேரமில்லையா எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
 
அதில், நடிகர் சங்கப் பொறுப்பில் இருப்போர் மற்றும் அப்பொறுப்பிற்கு வரத்துடிப்போர் என அனைவருக்கும் சிவாஜியின் பிறந்த தினம் நினைவுக்கு வராமல் போனது தமிழ கலைத்துறைக்கு துரதிஷ்டம் என்று தெரிவித்துள்ளது.
 
மேலும், நடிகர் சங்கத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பணி  என்றால், மூத்த நடிகர்களை வைத்து மரியாதை செய்திருக்கலாம் என ஆதங்கப்பட்டதுடன், கடந்த ஜூலை 1 ஆம் தேதி சிவாஜியின் நினைவு நாளையே நடிகர் சங்கம் மறந்துபோனது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்