நேற்று இரவு தீவிரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்த போது, தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் தாக்குதல் மேற்கொண்டனர். இதனை அடுத்து, பதிலுக்கு பாதுகாப்பு அதிகாரிகளும் சுட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த துப்பாக்கி சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.