உலகை விரல் நுனியில் கொண்டுவந்த’ கூகுள்’ : 21 ஆம் ஆண்டு பிறந்தநாள்..

வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (15:47 IST)
இன்றைய உலகில் இணையதளம் இல்லாமல் ஒருவராலும்  ஒன்றும் செய்யமுடியாது. ஏன் உலகமே சுழலவில்லை என்பது போன்ற நிலைமை உருவாகியுள்ளது. அனைத்து துறை சார்ந்த தகவல்களும் இணையதளத்தில் குவிந்து கிடப்பதால் நாம் தேடிச் செல்லாமல் நம் கைகளில் வந்து கிடைக்கிறது நான் இதன் சிறப்பம்சம்.
இந்நிலையில் உலகில் உள்ள இணையதளத்தில் முதன்மையான இணையதளமாக உள்ள கூகுள் இன்று தனது 21 ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடுகிறது.
 
அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மாணவர்களான லாரி பேஜ் மற்றும்  செர்ஜி பொரின் ஆகிய இருவரும் இணைந்து ஒரு தேடு பொறியை உருவாக்கி அதற்கு கூகுல் (google ) என்று பெயர் வைத்தனர். பின்னர் இந்த பெயரை கடந்த 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாளன்று கூகுள் டொமைன் பதிவு செய்தனர். 1998ஆம் ஆண்டு கூகுள் நிறுவனமாக பதிவு செய்தனர்.  
 
இதனைடுத்து, 1998 - செப்டம்பர் -27 ஆம் நாள் தான் இந்த நிறுவனத்தை தொடங்கிய நாள் என முடிவுசெய்யப்பட்டு  வருடம் தொறும் கூகுளில் பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறது. 
 
இந்த நிறுவனம் சர்வதேச அளவில் 4.5 பில்லியன் பாலோயர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுக்க 123 மொழிகளில் இந்த சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் பழைய கம்பூட்டர் மற்றும் கூகுள் பெயர் வைத்த 1998- 9- 27 என்று குறிப்பிட்டுள்ளது. 

கூகுள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை பதிவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்