ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப சிதம்பரம் சிபிஐ காவல் முடிந்து தற்போது நீதிமன்றக் காவலில் இப்போது திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கே மற்ற சாதாரணக் கைதிகளுக்கு வழங்கப்படும் வசதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. வீட்டு உணவுக் கூட மறுக்கப்பட்டுள்ளது. அவர் சிறையில் அடைக்கப்பட்டு 45 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் ஜாமீன் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி சுரேஷ் குமார் கைட் விசாரித்தார். அப்போது சிதம்பரத்துக்கு எதிராக வாதாடிய சொலிசிட்டர் துஷார் மேத்தா ‘சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தால் அவர் வெளிநாடு தப்பிச்செல்லவோ, சாட்சிகளைக் கலைக்கவோ வாய்ப்புள்ளது. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’ எனக் கூறினார். ஆனால் அவரது வாதத்தை மறுத்த நீதிபதி ‘சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லவோ ஆதாரங்களைக் கலைக்கவோ மாட்டார். ஆனால் அவர் முன்னாள் மத்திய அமைச்சர் என்பதால் அவர் செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சிகளிடம் தாக்கத்தை செலுத்த முயலுவார்’ எனத் தெரிவித்துள்ளார்.