புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக இருசக்கர வாகன விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாகவும், இதை கட்டுப்படுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு சிறிய தொகை அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது.
மேலும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய அவர்களின் லைசென்ஸ் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என்றும், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் புதுவை அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஹெல்மெட் அணிவது என்பது இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டும் இல்லை, பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் பொருந்தும் என்றும், இதில் எந்தவித அரசியல் தலையிடும் இருக்காது என்பதால் ஹெல்மெட் அணியாமல் செல்வது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் புதுவை அரசு தெரிவித்துள்ளது.