பாஜக முட்டாள்கள் பேசுவதை கேளுங்கள்! – பிரதமருக்கு சித்தார்த் ட்வீட்!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (14:00 IST)
பாஜக ஐடி விங்கை சேர்ந்த ஒருவர் தன்னை பற்றி கேவலமாக பேசியது குறித்து பிரதமருக்கு ட்வீட் செய்துள்ளார் நடிகர் சித்தார்த்.

சமீப காலமாக மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களையும் அதற்கு துணை போகும் தமிழக அரசையும் விமர்சித்து பேசி வருகிறார் நடிகர் சித்தார்த். சமீபத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டிவிட்டரில் இவர் பேசிய கருத்துக்கள் பாஜகவினர் இடையே கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சித்தார்த் சமீபத்தில் தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் தன் நண்பரின் பிறந்தநாளில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அவர் நண்பர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை பாஜக ஐடி விங்கை சேர்ந்த ஒருவர் தனது ட்விட்டரில் பகிர்ந்து சித்தார்த் பெண்களுடன் மது அருந்தி உல்லாசமாக இருப்பதாக பதிவிட்டு, அதில் பெண்கள் உடையணிந்திருக்கும் விதம் குறித்தும், போராட்டக்காரர்கள் குறித்தும் கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்த பதிவால் கோபமடைந்த சித்தார்த் அந்த பதிவு குறித்து பிரதமர் மோடியை இணைத்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பாஜக முட்டாள்கள் எதை உண்ண வேண்டும், பெண்கள் எப்படி உடுத்த வேண்டும் என பாடம் நடத்துவதாகவும், தன்னை கேவலமாக சித்தரிக்க முயல்வதாகவும், ஏனென்றால் தான் போராட்டத்துக்கு ஆதரவாக பேசுவதுதான் காரணம் என்றும், மேலும் தன் குடும்பத்தையோ, நண்பர்களையோ கேவலமாக பேச யாருக்கும் உரிமை கிடையாது என்றும் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்