மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று அனைத்து கட்சி எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. எழும்பூர் தாளமுத்து நடராசர் மாளிகை அருகே தொடங்கிய இந்த பேரணியில் திமுக வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்தது இந்த பேரணி.
குடியுரிமை சட்டம் குறித்து தமிழகத்தினர் கவலைப்பட தேவையில்லை என கூறி வந்த அதிமுகவினர், திமுகவின் எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில் திமுகவின் இந்த பேரணி குறித்து பேசியுள்ள அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் “அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தின் நிம்மதியை குலைப்பதற்காகவே மு.க.ஸ்டாலின் பேரணி நடத்துகிறார்” என குற்றம் சாட்டியுள்ளார்.