கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: 18 ஆண்டுகளுக்கு பின் அதிரடி தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (11:06 IST)
கடந்த 2000ஆம் ஆண்டு, ஜூலை 30ஆம் தேதி சந்தனக்கடத்தல் வீரப்பன் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தினான். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டகாஜனூர் என்ற ராஜ்குமாருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் இருந்து ராஜ்குமாரை கடத்தி சென்ற வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை மீட்க இருமாநில அரசுகளும் தீவிர முயற்சி செய்தன

அதன்பின்னர் சுமார் மூன்று மாதங்களுக்குக் பின்னர் பேச்சுவார்த்தையின் பயனாக ராஜ்குமாரை விடுதலை செய்தான் வீரப்பன். இதுகுறித்த வழக்கு ஒன்று கோபி நீதிமன்றத்தில் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, மல்லு ஆகியோர் உள்பட 14 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தாலும்  வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, மல்லு ஆகிய ஐவர் மரணம் அடைந்துவிட்டனர். இதனால் எஞ்சிய 9 பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் சற்றுமுன் வழங்கப்பட்ட தீர்ப்பில் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்