என்னை விசாரிக்க அவருக்கு அதிகாரம் இல்லை - உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா முறையீடு

செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (10:57 IST)
சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தம்மை விசாரிக்க அதிகாரம் இல்லை என ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஹைகோர்ட்டாவது மயிராவது, காவல்துறை ஒரு ஊழல்துறை, டி.ஜி.பி வீட்ல ரெய்டு நடக்குது நீங்கெல்லாம் யூனிபார்ம களட்டிட்டு வேற வேலைக்கு போங்க, போலீசுக்கு வெட்கமில்லயா? முஸ்லீம், கிறிஸ்தவன் தர மாதிரி நானும் உங்களுக்கு லஞ்சம் தரேன் என பல தேவையற்ற பேச்சுக்களை பேசினார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்திருந்தனர்.
கடந்த 17ந் தேதி உயர்நீதிமன்றத்தில் சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தது. ஹைகோர்ட்டையும், போலீஸையும் அவதூறாக பேசிய எச்.ராஜா 4 வாரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்நிலையில் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் சி.டி செல்வம் அமர்வு தன்னை விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சூமாட்டோ வழக்கை தலைமை நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்