பள்ளிகளை திறக்க கூடாது - ஸ்டிக்டாய் சொன்ன மெட்ரிக் பள்ளி இயக்குநரகம்

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (11:23 IST)
ஜனவரி 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் எச்சரிக்கை. 

 
வழக்கமாக கிறிஸ்மஸ் திருவிழாவையொட்டி அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படும் என்பதும் இந்த விடுமுறை ஜனவரி முதல் வாரம் வரை தொடரும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறை கிடையாது என பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. 
 
பின்னர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 25 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜனவரி 2 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளை திறந்து வகுப்பு நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் ஆணையிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்