கணவரிடம் கிடைக்கவில்லை...அவனிடம் கிடைத்தது : அபிராமி பகீர் வாக்குமூலம்

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (18:16 IST)
தன்னுடைய கணவர் இரவும், பகலுமாக வேலை பார்த்து கொண்டிருந்ததால் சுந்தரம் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக அபிராமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

 
குன்றத்தூரில் கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக தனது குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள அபிராமி கொடுக்கும் வாக்குமூலங்கள் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
 
அந்த பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அவர் தப்பி செல்ல திட்டமிட்டதாகவும் அபிராமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சுந்தரம் மற்றும் அபிராமியை போலீசார் கைது செய்துள்ளனர். விரைவில் இருவரையும் சிறையில் அடைக்கவுள்ளனர்.  
 
ஏற்கனவே வீட்டை விட்டு வெளியேறி சுந்தரத்துடன் வீடு வாடகைக்கு எடுத்து ஒருவாரம் அவருடன் அபிராமி இருந்துள்ளார். அதன்பின், அவரின் பெற்றோர்கள் அங்கு சென்று சுந்தரம் மற்றும் அபிராமியை தாக்கி, அவரை அழைத்து சென்று அறிவுரை செய்து விஜயுடன் தங்க வைத்துள்ளனர்.

 
இந்நிலையில், போலீசாரிடம் சுந்தரம் அளித்த வாக்குமூலத்தில் “நான் வேலை செய்யும் பிரியாணி கடைக்கு அபிராமி அடிக்கடி வருவார். அப்போது எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் குறிப்பிட்ட அளவை விட்ட அதிக அளவில் பிரியாணி கொடுத்து அபிராமியுடன் நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டேன். அதன் பின் அவர் தொலைப்பேசியில் பிரியாணி ஆர்டர் கொடுப்பார். அப்போது, வீட்டிற்கு சென்று பிரியாணி கொடுத்துவிட்டு, அவருடன் உல்லாசமாக இருப்பேன். என் வீட்டிற்கு அவரை அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளேன்’ என கூறியுள்ளார்.
 
அதேபோல், அபிராமி அளித்த வாக்குமூலத்தில் “ எனக்கு பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். எனவே, கடைகளில் ஆர்டர் கொடுத்து வீட்டிற்கு பிரியாணியை வரவழைத்து சாப்பிடுவேன். ஒருமுறை சுந்தரம் பணியாற்றும் பிரியாணி கடைக்கு என் கணவர் அழைத்து சென்றார். அந்த ஹோட்டலின் பிரியாணியின் சுவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 

எனவே, அடிக்கடி வீட்டிலிருந்து அந்த கடையில் பிரியாணி ஆர்டர் செய்வேன். அப்போதுதான் சுந்தரத்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் வீட்டிற்கு பிரியாணி கொண்டு வந்து கொடுப்பார். எனக்கு சுந்தரம் கூடுதலாக பிரியாணி கொடுப்பார். எனவே, அவரை எனக்கு பிடித்துப்போனது. நாளடைவில் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டது.
 
என் கணவரும் என்னை கவனிக்காமல் இரவு நேரத்தில் கூட வீட்டிற்கு வராமல் இருந்தார். எனவே, அவரிடம் கிடைக்காத சந்தோஷம் எனக்கு சுந்தரத்திடம் கிடைத்தது. அதனால், அவரை மறக்க முடியாமல், இந்த தவறை செய்து விட்டேன். என் கணவர் மிகவும் நல்லவர். அவருக்கு துரோகம் செய்து விட்டேன்” என கண்ணீர் விட்டு அழுதபடி கூறினார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்