தப்பி செல்ல தாலியை அடமானம் வைத்த அபிராமி...

திங்கள், 3 செப்டம்பர் 2018 (14:02 IST)
குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பி செல்லும்போது கை செலவுக்காக கணவர் கட்டிய தாலியை அபிராமி அடமானம் வைத்தது தெரியவந்துள்ளது.

 
அந்த பகுதியில் பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் என்பவருக்கும், அபிராமிக்கும் கள்ளக்காதல் இருந்ததாகவும், எனவே, அதற்கு தடையாக இருக்கும் கணவர் விஜய் மற்றும் இரு குழந்தைகளையும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் அவர் தப்பி செல்ல திட்டமிட்டதாகவும் அபிராமி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சுந்தரம் மற்றும் அபிராமியை போலீசார் கைது செய்துள்ளனர். விரைவில் இருவரையும் சிறையில் அடைக்கவுள்ளனர்.
 
குழந்தைகளை கொன்றுவிட்டு தனது மொபட் மூலம் கோயம்பேடுக்கு சென்றுள்ளார் அபிராமி. ஆனால், அவசரத்தில் செலவுக்கு பணம் எடுத்துவர மறந்துவிட்டார். எனவே, என்ன செய்யலாம் என யோசித்த போது, கழுத்தில் இருந்த தாலி நினைவுக்கு வந்துள்ளது. கணவனே இல்லை என ஆன பின்பு தாலி எதற்கு? என கருதிய அபிராமி, ஒரு அடகு கடையில் அதை அடமானம் வைத்து பணத்தை பெற்று அதன் பின் கோயம்பேட்டிற்கு சென்று திருவனந்தபுரம் சென்றுள்ளார்.
 
இந்த தகவலை போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் அபிராமி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்