கடலூர் அருகே ஏற்பட்ட பயங்கர மோதல் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள் மட்டும் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டு சூறையாடப்பட்ட சம்பவத்தால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.ல்
கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து ஏற்பட்ட பயங்கர மோதலில் 25 படகுகளுக்கு தீ வைக்கப் பட்டதாகவும், பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டன என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதனை அடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் பதற்றத்தை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
கடலூர் தாழங்குடா என்ற பகுதியில் தான் இந்த மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதல் தொடர்பாக 60-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது தாழங்குடா கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது
மதியழகன் மற்றும் மாசிலாமணி ஆகிய இரு தரப்பின் ஆதரவாளர்களிடையே ஏற்ட்ட மோதலில் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை அடுத்து அந்த பகுதியில் பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது என்றும் இதனை அடுத்து மதியழகன் தரப்பை சேர்ந்த 12 பேர் மீதும் மாசிலாமணி தரப்பை சேர்ந்த 50 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
பலத்த போலீஸ் பாதுகாப்பை அடுத்து தற்போது அங்கு நிலைமை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன