தமிழ்நாட்டு கிராமத்தில் தமிழ் முறைப்படி திருமணம் செய்த தைவான் ஜோடி!

Prasanth Karthick
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (09:52 IST)
தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்றால் தமிழ் முறைப்படி திருமணம் செய்ய வந்த தைவான் ஜோடிக்கு கிராமத்தினர் சேர்ந்து திருமணம் செய்து வைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.



பல ஆயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் நீடித்து வரும் பண்டைய மொழிக்கலாச்சாரத்தில் ஒன்று தமிழ். சங்க காலம் தொடங்கி தமிழ் மீது கொண்ட பற்றால் எத்தனையோ வெளி தேசத்தவர் தமிழுக்கு தொண்டாற்றியுள்ளனர். தற்போதைய காலத்திலும் பல நாட்டு மக்களையும் தமிழ் கலாச்சாரம் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.

அவ்வாறு தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள்தான் தைவான் நாட்டை சேர்ந்த யோங் சென் மற்றும் ருச்சென். இவர்கள் தமிழ் கலாச்சாரம் மீது கொண்ட பற்றால் தங்களது திருமணத்தை தமிழ்நாட்டில்தான் நடத்த வேண்டும் என விரும்பியுள்ளனர்.

ALSO READ: மேற்குவங்கத்தில் ஆதார் அட்டைகள் முடக்கம்.. விளக்கம் கேட்டு பிரதமருக்கு மம்தா கடிதம்..!
 
அதன்படி இவர்களது திருமணம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள காரைமேடு சித்தர்புரத்தில் நடைபெற்றது. அந்த கிராம மக்கள் அனைவரும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு தம்பதியரை வாழ்த்தியதுடன், சிலர் தமிழ் முறைப்படி சீர் வரிசையும் செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்