திருமணம் செய்து வாழ்ந்த இளைஞர்கள்.. ஒருவர் இறந்ததால் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்..!

Siva

வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (08:31 IST)
கேரளாவில் இரண்டு இளைஞர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர்களில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அவருடைய உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கேரளாவை சேர்ந்த மனு மற்றும் ஜெபின் ஆகிய இருவரும் நெருக்கமாக நண்பர்களாக பழகிய நிலையில் திடீரென இருவரும் திருமணம் செய்து கொண்டனர், இந்த திருமணத்திற்கு இரு தரப்பு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இருவருமே தங்கள் தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டனர். 
 
இந்த நிலையில் சமீபத்தில் மனு, மொட்டை மாடியில் உட்கார்ந்து செல்போன் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்து காலமான நிலையில் அவருடைய உறவினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. 
 
உறவினர்கள் நேரில் வந்து பார்த்த நிலையில் மருத்துவமனையில் இருந்து மனுவின் உடலை பெற்றுக் கொள்ள மறுத்தனர். ஜெபின் தான் உடலை பெற்றுக் கொள்வதாக அறிவித்த போதிலும் அவரிடம் உடலை வழங்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது மனுவின் உடலை ஜெபின் பெற்று இறுதிச்சடங்கு செய்ய அனுமதி அளித்ததை அடுத்து அவருடைய உடல் இறுதி அடக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்