விழுப்புரம் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Mahendran
சனி, 15 ஜூன் 2024 (11:12 IST)
விழுப்புரத்தில் தாசில்தார் வீட்டில் 2 மணிநேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
2015ஆம் ஆண்டு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக விழுப்புரம் தாசில்தார் மீது எழுந்த புகாரில் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
கடலூர் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்தது  உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுந்தர்ராஜன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் தேவிகா, இடைத்தரகர் முருகன் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட  3 பேரின் வீடுகளிலும் 2 மணிநேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருவதாகவும், இதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்