கள்ளக்காதலில் தத்தளித்த சப்-இன்ஸ்பெக்டர்? தூக்கில் தொங்கிய மனைவி

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (14:14 IST)
சென்னையில் போலீஸ்காரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த ஜெயகணேஷ் என்பவர் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு பிரவீணா(27) என்ற மனைவியும் பிரஜித்(9) என்ற மகனும் உள்ளனர்.
 
கடந்த 2009-ம் ஆண்டு ஜெயகணேஷ் பிரவீனாவின் 17வது வயதில் அவரை மயக்கி தன் காதல் வலையில் வீழ்த்தி, பிரவீனாவின் பெற்றோர் சம்மதமின்றி அவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது வாழ்க்கை இனிமையாக சென்று கொண்டிருந்தது.
 
இந்நிலையில் ஜெய்கணேசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தது. அதன்பிறகு அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஜெய்கணேஷ் அவரது உறவுக்கார பெண் ஒருவரிடம் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரவீணா ஜெயகணேஷிடம் கேட்டுள்ளார். ஆனால் இதற்கு பதிலளிக்காமல் அவர் மழுப்பியுள்ளார்.
நேற்று முன் தினம் ஜெய்கணேசுக்கு பிறந்தநாள் என்பதால் மனைவி மகனுடன் பிறந்தநாள் கொண்டாடிவிட்டு வெளியே செல்வதாக கூறியிருக்கிறார் ஜெயகணேஷ். எங்கே செல்கிறீர்கள் என பிரவீணா கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. பின்னர் ஜெய்கணேஷ் வெளியில் சென்றுவிட்டார்.
 
மனவேதனையில் இருந்த பிரவீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பிரவீணா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து பிரவீணாவின் உறவினர்கள் கூறுகையில் ஜெய்கணேஷ் போலீஸ் வேலையில் சேர்ந்தபிறகு சம்பள பணத்தை மனைவிக்கு கொடுக்காமலும் அவருக்கு சாப்பாடு போடாமலும் கொடுமைபடுத்தியதால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறியிருக்கின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிந்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்