நீட் விலக்கு நம் இலக்கு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்..!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (22:05 IST)
நீட் விலக்கு நம் இலக்கு என்கிற முழக்கத்தோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து திமுக பிரமுகர் ராஜிவ் காந்தி கூறியதாவது;
 
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பிரதிபலிக்கு முகமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய நீட் விலக்கு மசோதாவிற்கு மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் கையெழுத்து இடக்கோரி வழிகாட்டுதல் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
 
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி முன்னெடுக்கிற மாபெரும் மக்கள் கையெழுத்து இயக்கத்தினை எப்படி நடத்துவது என்பதற்கான வழிகாட்டுதல் கூட்டம் நேற்று கானோளி காட்சி வாயிலாக மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
 
அந்த கூட்டத்தில்.. நீட் விலக்கு! நம் இலக்கு!! நீட்டை ஒழிப்போம்! மாணவர்களை காப்போம்!! என்கிற உறுதி ஏற்க்கப்பட்டது!
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்