டாஸ்மாக் வேண்டும்: திருப்பூரில் குடிமகன் போராட்டம்

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (15:57 IST)
திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என குடிமகன் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார்.


 

 
திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரிய நடந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. பெண்கள் மற்றும் ஆண்கள் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. 
 
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், கோடாங்கிபாளையம், கரணம்பேட்டை ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடை இல்லை. அந்த பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என கரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபரமணியம் என்ற குடிமகன் ஒருவன் தனியாக போராட்டம் நடத்தி வருகிறார்.
அடுத்த கட்டுரையில்