6 பொண்டாட்டிகளுக்கு அல்வா கொடுத்த மளிகை கடைக்காரர்: 7வது மனைவியுடன் செய்த காரியம்

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2019 (12:46 IST)
திண்டுக்கல்லில் நபர் ஒருவர் 6 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததோடு தற்பொழுது 7வது பெண்ணுடன் ஓடிப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் தென்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். மளிகைகடை நடத்திவரும் முருகன் இதுவவரை 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியிருக்கிறார். சமீபத்தில் இவனது வலையில் விழுந்த ராதா என்ற பெண்ணை 6வதாக திருமணம் செய்துகொண்டான்.
 
சில நாட்கள் இவர்களது வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருந்தது. ராதாவிற்கு ஆண் குழந்தை இருந்த நிலையில், தற்பொழுது அவர் கர்ப்பமாக இருக்கிறார். முருகனுக்கு எற்பட்ட கடன்பிரச்சனையால் அவர்கள் இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை இருந்துவந்துள்ளது.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முருகன் காணாமல் போனார். இதனையடுத்து ராதா கணவனை பற்றி போலீஸில் புகார் அளித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. முருகன் ஏற்கனவே 5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதும், தற்பொழுது ஒரு பெண்ணுடன் ஓடிப்போனதையும் கேட்டு உறைந்து போன ராதா கையில் ஒரு குழந்தையையும் வயிற்றில் ஒரு குழந்தையையும் வைத்துக்கொண்டு செய்வதறியாது நிர்கதியாய் தவித்து வருகிறார். முருகனை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்