விருதாச்சலத்தில் 15 வயது சிறுமியை அவரது சித்தப்பாவே சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதாச்சலத்தை சேர்ந்த வள்ளியம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரின் பக்கத்து வீட்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வந்தார். அந்த சிறுமிக்கு சின்னதுரை சித்தப்பா முறை.
சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டினுள் புகுந்த சின்னதுரை சிறுமியை கற்பழித்துள்ளார். வெளியே சொன்னால் மானம் போய்விடும் என கூறி சிறுமியை மிரட்டியுள்ளார். மேலும் இதேபோல சிறுமியை மிரட்டி பல முறை வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார்.
இதனையறிந்த சின்னதுரை சிறுமிக்கு கருகலைப்பு மாத்திரை கொடுத்து சிசுவை கொலை செய்துள்ளார். கடந்த ஒரு வருடமாக சிறுமியிடம் அத்துமீறியுள்ளான் கொடூரன் சின்னதுரை. சமீபத்தில் இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர பேரதிர்ச்சிக்கு ஆளான அவர்கள், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீஸார் அந்த அயோக்கியன் சின்னதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.