உதயநிதி மீது தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார்: எச். ராஜா பேட்டி..!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (16:07 IST)
சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசிய உதயநிதி மீது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க உள்ளோம் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார். 
 
பாரதம் என பெயர் மாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் டி ஆர் பாலுவுக்கு கருப்பு பணத்தை மாற்றுவதில் தான் சிக்கல் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
அமைச்சர் உதயநிதியின் பேச்சுக்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்கள் எதிர்த்து தெரிவித்து வருகின்றனர் என்றும் சனாதனம் குறித்து பேசியவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் உதயநிதி ஸ்டாலின் மீது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பாஜக சார்பில் புகார் அளிக்க உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்