பள்ளி வளாகத்தில் பரப்புரை: ராகுல்காந்தி மீது புகார்!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (21:37 IST)
தேர்தல் கமிஷனின் விதிமுறைப்படி பள்ளி வளாகங்களில் தேர்தல் பரப்புரை செய்ய கூடாது என்ற நிலையில் சமீபத்தில் ராகுல் காந்தி பள்ளியில் தேர்தல் பிரச்சாரம் செய்ததை அடுத்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது 
 
சமீபத்தில் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசு பள்ளியில் பரப்புரை மேற்கொண்டதாக பாஜக தமிழக மாநில தலைவர் எல் முருகன் அவர்கள் புகார் தெரிவித்துள்ளார்
 
தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் இதுகுறித்து அவர் அளித்த புகாரில் கல்வி நிறுவனங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டதாகவும் இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
இந்த புகார் மீது விரைவில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்