வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு நாள்.. த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை

Mahendran

புதன், 25 டிசம்பர் 2024 (14:05 IST)
இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்ட வீராங்கனை வேலுநாச்சியார் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உருவப்படத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார் அவர்களின் 228 வது நினைவு தினம் இன்று தமிழக முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் வேலுநாச்சியார் நினைவு தினத்தை ஒட்டி தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு விஜய் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர்,

இந்தியாவின் முதல் விடுதலை பெண் போராளி,

அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி,

எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.



Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்