கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவையைச் சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் கனிமொழி எம்பி பயணம் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அவருக்கும், அவர் ஓட்டி வந்த பேருந்து உரிமையாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் ஷர்மிளா வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.
இது குறித்த செய்திகள் ஊடகங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவருக்கு சொந்தமாக கார் வாங்கி கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது பெண் ஓட்டுனர் ஷர்மிளா மீது சைபர் க்ரைம் போலீசார் மூன்று பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பெண் ஓட்டுனர் ஷர்மிளா சத்தி ரோடு சிக்னல் சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் அதனை தட்டி கேட்ட எஸ்ஐ ராஜேஸ்வரி என்பவரை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் தவறாக பதிவு செய்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.