வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்.
தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆம், சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில், வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடுமாம்.