தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை எப்போது??

வெள்ளி, 7 அக்டோபர் 2022 (10:03 IST)
தமிழகத்துக்கான வட கிழக்கு பருவமழை இந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர கடலோரப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும் இதனால் வட தமிழ்நாடு மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை தொடர்ந்து தென் மேற்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதியுடன் விடைபெற உள்ளதால், தமிழகத்துக்கான வட கிழக்கு பருவமழை அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என  அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி தொடங்கி 4 மாதங்கள் பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 35 - 75 சதவீதம் கூடுதலாக மழை பெய்யவும் வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

Edited By: Sugapriya Prakash

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்