தமிழ்நாட்டில் இதுவரை 8.76 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தியாச்சு!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (13:32 IST)
தமிழ்நாட்டில் இதுவரை 8.76 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கடந்த செப்டம்பர் மாதம் முதலாக தமிழக அரசு கொரோனா தடுப்பூசி முகாமை வாரம்தோறும் நடத்தி வருகிறது. 
 
ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டு இவற்றை பயன்படுத்தி தமிழகத்திலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இப்போது சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை 8.76 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்