திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் நின்ற 78 செம்மறி ஆடுகள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்தன.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் முனியாண்டி என்பவர் அவரது வீட்டில் ஆடுகளை அடைத்து வைத்திருந்த வேலி சரிந்து, ஆடுகள் அனைத்தும் ரயில் நிலையம் நோக்கி சென்றுள்ளன.
வடமதுரை ரயில் நிலையத்தில் உள்ள தண்டவளத்தில் நின்று கொண்டிருந்தன ஆடுகள் நாகர்கோவில்-சென்னை இடையே செல்லும் ரயிலில் அடிப்பட்டு, 78 செம்மறி சம்மவ இடத்திலே உயிரிழந்தன.
காலையில் ஆடுகள் தண்டவாளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து, ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ:4 லட்சம் கொண்டதாகும்.