வெற்றிவேல் எங்கே? 7 தனிப்படைகள் அமைத்து தேடி வரும் போலீஸ்

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (13:57 IST)
தினகரன் ஆதரவாளர்களான தங்கத்தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரும் நேற்று தலைமை செயல்கத்தில் போலீசாரின் அனுமதியின்றி அத்துமீறி உள்ளே நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனையடுத்து இருவர் மீதும் அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து  வெற்றிவேலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  வெற்றிவேலின் வீடு, அலுவலகங்களில் தனிப்படை காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும், அவரை விரைவில் பிடிக்க தீவிர முயற்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தங்க.தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மீது திடுக்கிடும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுக்கடுக்காக கூறினார். முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறையில் 4,100 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களை முதல்வர் தனது உறவினர்களுக்கு ஒதுக்கியுள்ளதாகவும் இதில் 1,500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்