இங்கதான் இருந்துச்சு.. காணாம போயிட்டு! – திருடுபோன 600 செல்போன் டவர்கள்!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (11:04 IST)
அலைபேசி சேவைக்கு அலைக்கற்றை பரிமாற்றத்திற்கு உதவும் 600 செல்போன் டவர்கள் திருடுபோனதாக வெளியாகியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் இந்தியா முழுவதும் செல்போன் டவர்கள் அமைக்கும் பணியை மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் இந்நிறுவனம் 6 ஆயிரத்திற்கும் அதிகமான செல்போன் டவர்களை அமைத்துள்ளது.

கடந்த 2018ல் பிரபலமான அலைபேசி சேவை நிறுவனம் திவாலானது. அந்த நிறுவனத்திற்காக தமிழகத்தில் அமைக்கப்பட்ட செல்போன் டவர்கள் கவனிப்பின்றி இருந்துள்ளது. அவற்றை வேறு செல்போன் நிறுவன சேவைகளுக்கு பயன்படுத்தலாம் என டவர் இருந்த இடம் சென்று பார்த்தபோது அங்கு டவர் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் 600 செல்போன் டவர்கள் மாயமானதாக அந்நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக முழுமுடக்கம் அமலில் இருந்த நிலையில் மர்ம நபர்கள் செல்போன் கோபுரங்களை திருடி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்