17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
ஞாயிறு, 19 ஜூன் 2022 (15:21 IST)
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.