52 கல்லுரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (11:52 IST)
52 கல்லுரி முதல்வர்களுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்: என்ன காரணம்?
தமிழகத்திலுள்ள 52 கல்லூரி முதல்வர்களுக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திமுக ஆட்சி தோன்றிய கடந்த 6 மாதங்களில் லஞ்ச ஒழிப்பு துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் எஸ்சி எஸ்டி மாணவர்கள் கல்வி உதவித் தொகைகள் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்துள்ளது. 
 
இந்த புகாரின் அடிப்படையில் தமிழகத்திலுள்ள 52 கல்லூரி முதல்வர்கள் நாளை நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் என பல கல்லூரிகளில் முறைகேடு நடந்துள்ளதாக தணிக்கை துறை அறிக்கை அளித்ததை அடுத்து தற்போது இந்த சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்