தமிழகம் முழுவதும் 5,000, சென்னையில் மட்டும் 750 - அரசு ஏற்பாடு!

Webdunia
சனி, 13 நவம்பர் 2021 (08:01 IST)
நோய் தொற்று பரவும் அபாயம் இருந்தது காக்கா இன்று தமிழ்நாடு முழுவதும் 5,000 மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. 

 
தமிழகம் முழுவதும் கனமழை பெய்த நிலையில் சென்னையில் பெய்துள்ள கனமழையால் பல பகுதிகளில் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தேங்கி நின்ற நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் இருந்தது. எனவே நேற்று சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 
 
இதனிடையே இன்று தமிழ்நாடு முழுவதும் 5,000 மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக மிகப்பெரிய மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மேலும் சென்னையில் மட்டும் 750 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்