தமிழகத்தில்குட்காமற்றும்புகையிலைசம்மந்தப்பட்டபொருட்கள்விற்பதற்குதடைவிதிக்கப்பட்டிருக்கும்நாமக்கல்லில் ஆட்டோக்களில் வைத்து 400 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குட்கா ஊழல் விவகாரத்தில் கீழ்நிலை காவல்துறை அதிகாரிகளில் இருந்து அதிமுகவின் சுகாதாரத்துறை அமைச்சர் பெயர் வரை சர்ச்சையில் சிக்கி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. முக்கிய ஆதாரமாகச் சிக்கிய டைரி ஒன்றில் குட்கா விற்பனையை கண்டுக் கொள்ளாமல் இருக்க சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன், சென்னை போலீஸ் ஆணையராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு ரூ.40 கோடிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. பல இடங்களில் வருமான வரிச் சோதனையும் நடத்தப்பட்டது. இந்த வழக்கு சம்மந்தமாக சில உணவுக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளையும், குட்கா உற்பத்தியாளர்களையும் கைது செய்து சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில் குட்கா விறபனை தடுத்து நிறுத்தப்பட்டு விட்டதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்று நாமக்கல்லில் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஆட்டோக்களில் வைத்து கடத்தி செல்லப்பட்ட 29 மூட்டை குட்கா பொருட்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் எடை சுமார் 400 கிலோ இருக்கும் என காவல்துறை சார்பில் தெர்விக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ ஓட்டுனர்களை கைது செய்துள்ள போலிஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோல ஏற்கனவே தேனி மற்றும் காஞ்சிபுரத்திலும் குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.