டாஸ்மாக் தடையை மீறி மதுபானம் விற்பனை : 4 பேர் கைது !!

Webdunia
சனி, 9 மே 2020 (21:46 IST)
விருதுநகரில் டாஸ்மாக் தடையை மீறி மதுபானம் விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளிலும் சமூக விலகலை பின்பற்றவில்லை என்பது சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில் இருந்து தெரிய வந்தது. இந்த நிலையில் அதிரடியாக நேற்றூ மாலை  சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சில உத்தரவுகளை பிறப்பித்தது.

இந்த உத்தரவின்படி ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும் என்றும் ஆன்லைனில் மட்டுமே மதுக்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் மீறப்பட்டதால் இந்த அதிரடி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த உத்தரவால் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போராடிய அரசியல் கட்சிகளுக்கும், சமூக நல ஆர்வலர்களுக்கும் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

இந்நிலையில்,  விருதுநகர் மாவட்டம் மாலப்பேட்டை தெருவில் மதுபானக் கடைக்கு பின்புறம் தடையை மீறி மதுபான விற்பனை  செய்த  டாஸ்மாக் மேற்பார்வையாளர், விற்பனையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்