சென்னையில் கொரோனா அதிகம் பரவியது ஏன் என்பது குறித்து சமீபத்தில் ஐஐடி நடத்திய ஆய்வின் அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ‘ஸ்மார்ட் போனில் வைத்திருப்பவர்கள் எங்கெல்லாம் சென்று உள்ளார்கள் என்ற வரைபட ஆய்வு தரவுகளை உருவாக்கி அதன் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் விழுப்புரம், சென்னை, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வார இறுதி நாட்களிலும் மூன்றாவது கட்ட ஊரடங்கு நேரத்திலும் சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வட சென்னை, மத்திய சென்னை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததாகவும் ஊரடங்கை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது