13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

Siva
வெள்ளி, 4 அக்டோபர் 2024 (17:30 IST)
ஈரோடு மாவட்டத்தில் 32 வயது பூக்கடைக்காரர் ஒருவர் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் பூக்கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு வள்ளுவர் வீதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற பூக்கடைக்காரர் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அவரது பூக்கடைக்கு வந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அவரது பெற்றோர் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்த நிலையில், பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் பூக்கடைக்காரர் அப்துல் ரகுமான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அதன் பின்னர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். திருமணம் ஆகி குழந்தை இருக்கும் அப்துல் ரகுமான் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்