தேர்தலுக்காக 3000 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல்

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (20:34 IST)
தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வாக்களிக்க சொந்த ஊர் செல்லும் வசதிக்காக 3000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசின் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது
 
ஏப்ரல் 2ஆம் தேதி புனித வெள்ளி விடுமுறை என்பதும் ஏப்ரல் 3 மற்றும் 4ம் சனி ஞாயிறு விடுமுறை என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நாளில் விடுமுறை என்பதால் இடையில் ஐந்தாம் தேதி ஒன்று மட்டுமே வேலை நாளாக உள்ளது இதனால் 5ஆம் தேதி விடுமுறை எடுத்து 5 நாட்கள் மொத்தமாக விடுமுறை கிடைப்பதால் பலர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இதனை அடுத்து ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர் செல்பவர்களுக்கு வசதியாக 3000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதே போல் ஓட்டு போட்டு விட்டு திரும்புவதற்கு வசதிக்காக ஏழாம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசின் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்