சசிகலாவுடன் சந்திப்பு: தினகரன் மீது 18 பேரும் அதிருப்தியா?

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:33 IST)
தமிழக அரசியலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. சபாநாயகர் தனபால் எடுத்த நடவடிக்கை தவறில்லை என கூறி 18 எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.   
 
இதனால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களும் தங்கள் பதவியை இழந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, இன்று எம்.எல்.ஏக்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன்பின், இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
 
ஆனால், சபாநாயகர் தனபால் தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் தீர்ப்பளிக்கும் முன் தன் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
 
இது குறித்து தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் பின்வருமாறு பேசினார், நாங்கள் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காகவே மேல்முறையீடு செய்ய உள்ளோம். பயந்து அல்ல. 
 
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் 18 பேருமே மேல்முறையீடு செய்ய ஒப்புக் கொண்டனர். அதோடு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட அனைவரும் விரைவில் சந்திப்போம் என தெரிவித்துள்ளார். 
 
இதுவரை சசிகலாவை தினகரன் மட்டுமே சென்று பார்த்துவிட்டு வந்த நிலையில், தற்போது தங்க தமிழ்செல்வன் அனைவரும் சசிகலாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்