17 வயது சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவர்.. காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Mahendran
செவ்வாய், 21 மே 2024 (15:56 IST)
17 வயது சிறுமி விபச்சாரத்தில் தள்ளப்பட்ட நிலையில் அவருடன் உல்லாசமாக இருக்க 70 வயது முதியவர் வந்ததாகவும் அந்த கும்பலை கொத்தாக காவல்துறை கைது செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை வளசரவாக்கத்தில் நதியா என்ற 37 வயது பெண் சிறுமிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவரது வீட்டில் திடீரென போலீசார் சோதனை செய்த நிலையில் 17 வயது சிறுமியுடன் உல்லாசமாக இருக்க 70 வயது முதியவர் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது
 
இதனை அடுத்து விபச்சார தொழிலை நடத்தியதாக நதியாவை கைது செய்த போலீசார் சிறுமியுடன் உல்லாசம் அனுபவிக்க வந்த முதியவரையும் கைது செய்தனர். நதியாவிடம் விசாரணை செய்தபோது சினிமா ஆசையால் வரும் இளம் பெண்களை அவர்களுடைய வறுமையை காரணமாக வைத்து விபச்சாரத்தை தள்ளி வருவதாகவும் ஏற்கனவே விபச்சார தடுப்பு பிரிவு போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்