ஒரே நேரத்தில் இரண்டு வாலிபர்களை காதலித்த இளம்பெண்: அதன்பின் நேர்ந்த விபரீதம்

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (20:22 IST)
வேலூரை அடுத்த அரியூர்க்குப்பம் என்ற பகுதியில் 17 வயது இளம்பெண் ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அங்கிருந்த கல்குவாரி ஒன்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்திருந்தார். அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்
 
இந்த நிலையில் நிவேதா அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு ஊழியரையும் அதன்பின் ஆட்டோ டிரைவர் ஒருவரையும் என ஒரே நேரத்தில் 2 பேரை காதலித்து உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது 
 
இந்த நிலையில் இளம்பெண்ணின் இரட்டை வேடத்தை அறிந்த ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணிடம் இருந்து ஒதுங்கிக் கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் ஆட்டோ டிரைவரை மிரட்டி தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று இளம்பெண் கட்டாயப்படுத்திதாக கூறப்படுகிறது.
 
இதன் பின்னர் குவாரி அருகிலுள்ள கோயிலில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆட்டோ டிரைவர் கூறியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து திருமணத்திற்கு தயாராகி வந்தபோது இளம்பெண்ணை கல்குவாரிகள் ஆட்டோ டிரைவர் கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளார்
 
இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 17 வயது இளம்பெண் ஒரே நேரத்தில் இரண்டு வாலிபர்களை காதலித்ததால் பரிதாபமான முறையில் மரணம் அடைந்தது அந்த பகுதியில் உள்ளவர்களை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்