இந்நிலையில் அய்யப்பனுக்கு தனது காதலி தமிழ், வேறு ஒருவரோடு பழகுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு வேலை முடிந்து செல்லும் போது சேஷ வாடி என்ற இடத்தில் இதுகுறித்து சண்டைபோட, தற்கொலை செய்துகொள்ள இருவரும் முடிவெடுத்துள்ளனர்.
அய்யப்பன் இரு வாழை பழங்களை வாங்கி விஷத்தை கலந்து வைத்திருப்பதாக சொல்லி தமிழை சாப்பிட சொல்லியுள்ளார். பின்னர் தான் சாப்பிடுவதாக சொல்லியுள்ளார். இதை நம்பி தமிழ் வாழைப்பழத்தை சாப்பிட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். ஆனால் அய்யப்பன் தனது வாழைப் பழத்தை சாப்பிடாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.