16 வயதில் தந்தையான சிறுவன் – டிக்டாக் காதலால் வந்த வினை !

Webdunia
சனி, 6 ஜூலை 2019 (10:51 IST)
சென்னையில் படித்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் டிக்டாக் மோகத்தால் இப்போது 40 நாள் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

தேனியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சென்னையில் உள்ள தொழில்பயிற்சி மையத்தில் படித்து வந்துள்ளான். இவனது தந்தை துபாயில் நல்ல வேலையில் உள்ளார். இந்நிலையில் சிறுவன் டிக்டாக் செயலியை அதிகமாகப் பயன்படுத்தி வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அதனால் அவருக்கு அதிகமாக பாலோயர்கள் கிடைத்துள்ளனர்.

இதையடுத்து இவர் கடந்த அக்டோபர் மாதம் திடீரெனக் காணாமல் போயுள்ளார். இதனையடுத்து சென்னை வந்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனுப் பதிவு செய்துள்ளார். ஆனால் போலிஸார் அலட்சியமாக இருக்கவே கிட்டத்தட்ட 10 மாதமாக கண்டுபிடிக்கவில்லை. இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அந்தப் பையனின் மொபைல் போனின் ஐஎம்ஈஐ நம்ப்ரை வைத்து பின் தொடர் ஊத்துக்குளியில் வைத்து அவனைப் பிடித்துள்ளனர்.

ஆனால் போலிஸார், பெற்றோர் என அனைவரையும் அதிர்ச்சியாக்கும் விதமாக அங்கு அவர் செவிலியர் ஒருவரோடு குடும்பம் நடத்தி குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். டிக்டாக் மூலம் அந்த செவிலியரோடுப் பழகி பின்பு அது காதலாக மலர்ந்ததாக இருவரும் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பிறந்து 40 நாட்களே ஆனக் குழந்தையோடு காதலர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அந்த செவிலியர் மேல் ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் குழந்தையின் எதிர்காலத்துக்காக அந்த சிறுவனின் பெற்றோர் 5 லட்சம் கட்டவேண்டும் எனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்